IBC Tamil
மீண்டும் கைவிடப்பட்டுள்ளது யாழ். நெடுந்தூர பேருந்து நிலையம்
நீண்ட கால இழுபறிக்கு பின்னர் நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்துக்கு அருகிலுள்ள நெடுந்தூரப் பேருந்து நிலையத்திலிருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாகாணங்களுக்கான பேருந்து சேவைகள் கடந்த செவ்வாய்க்கிழமை நான்காவது தடவையாக "கோலாகலமாக" ஆரம்பித்து வைக்கப்பட்டது. பேருந்து நிலையத்தில் இருந்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்ட போது , தனியார் பேருந்து சங்கத்தினர் மாத்திரமே அங்கிருந்து தமது சேவைகளை ஆரம்பித்தனர். இலங்கை போக்குவரத்து சபையினர் , "எமக்கு என்று ஒரு பே...