உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

“மாணவர்களுக்கு மொட்டை அடிச்சு விடுங்க...” - அமைச்சர் ஜெகதீஸ்வரி பேச்சால் சர்ச்சை!

சரியாக முடி வெட்டாத மாணவர்களுக்கு மொட்டை அடித்து விடுங்கள் என தமிழக அமைச்சர் ஜெகதீஸ்வரி பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் அயன்ரெட்டியபட்டியில் உள்ள அரசுப் பள்ளியில் சுற்றுச்சுவர் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று (02-11-26) நடைபெற்றது. இந்த விழாவில் சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினார். அதில் அவர் பேசியதாவது, “இன்றைக்கு இருக்கும் பிள்ளைகள் முடி வெட்டுவதை பார்க்கும் போது எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. பள்ளிக்கு செல்கிற மாதிரியா முடி வெட்டுகிறார்கள்?, சில பிள்ளைகளை பார்க்கும் போது ரவுடி மாதிரி இருக்கிறது. மு…