IBC Tamil
கறுப்பு ஜூலை தொடர்பான ஆய்வுக்காக விசேட குழு நியமன யோசனை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு
புதிய இணைப்பு 1983 கறுப்பு ஜூலை துயரச் சம்பவம் மற்றும் அதன் தாக்கம் குறித்து முழுமையான ஆய்வை மேற்கொள்வதற்காக விசேட நாடாளுமன்றக் குழுவொன்றை நியமிக்குமாறு கோரி, அது தொடர்பான யோசனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தனுர திஸாநாயக்கவினால் இந்த யோசனை சமர்ப்பிக்கப்பட்டதுடன், அதே கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பாக்ய ஸ்ரீ ஹேரத்தினால் அது உறுதி செய்யப்பட்டது. கருப்பு ஜூலை சம்பவம் குறித்து முழுமையான ஆய்வு...