Hindu Tamil Thisai
நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்றுக்கொண்டால் 2 நாளில் ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க தயார்: ஈரான்
டெஹ்ரான்: எங்கள் நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்றுக்கொண்டால் ஹார்முஸ் ஜலசந்தியை அடுத்த இரண்டே நாட்களில் மீண்டும் திறக்கத் தயார் என ஈரான் வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து ஈரானிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாய் கூறியதாவது: அமெரிக்காவுடன் மத்தியஸ்தர்கள் வழியாக சமரச பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. போர் பதற்றத்தைத் தணிக்க முதன்மை கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்…