உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

ஆந்திராவில் கரையை கடந்த முரசு புயல்: பெயரிடுதல் முதல் தீவிரம் வரை: புயல்களின் அறிவியலைப் புரிந்துகொள்வது எப்படி?

வங்கக்கடலில் உருவான தீவிர புயலான ‘முரசு’, தெற்கு ஆந்திரப் பிரதேச கடலோரப் பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) திங்கள்கிழமை மாலை (நவம்பர் 2) தெரிவித்திருந்தது. நவம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் ஆந்திரப் பிரதேசத்தின் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஒருசில இடங்களில் கனமழை முதல் மிகக் கனமழையும், ஓரிரு இடங்களில் மிக மிகக் கனமழையும் பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கணித்திருந்தது. இப்புயல் திங்கள் இரவோ அல்லது செவ்வாய் காலையிலோ கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறியிருந்தது. அதன்படி இன்று (நவம்பர் 3) அதிகாலையில் புயல் ஆந்திர எல்லையில்…