Hindu Tamil Thisai
ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்: மேற்காசியாவில் பதற்றம்
புதுடெல்லி: ஈரானின் கெஷ்ம் தீவு (Qeshm) மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி உள்ளது. இதன் காரணமாக மேற்காசியாவில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதல் குறித்த தகவலை அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்தியாக வெளியிட்டுள்ளது அமெரிக்க செய்தி நிறுவனம் ஒன்று. கெஷ்ம் தீவு, ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடைக்கால தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்தச் சூழலில்…