IBC Tamil
யாழ் - மன்னார் வீதியில் கைப்பற்றப்பட்ட பாரியளவான போதைப்பொருட்கள்!
யாழ்ப்பாணம் - மன்னார் வீதியில் சந்தேகத்திற்கிடமான இரண்டு மோட்டார் சைக்கிள்களை சோதனையிட்டதில் பெருந்தொகையான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. பூநகரி பாடசாலைக்கு அருகில் காவல்துறை உத்தியோகத்தர்கள் குழுவொன்று வீதித் தடை சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, நேற்று இரவு (02) இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்போது, குறித்த மோட்டார் சைக்கிள்களை நிறுத்துமாறு சைகை செய்யப்பட்டபோதிலும், ஒரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் தன்னிடமிருந்த பொதி ஒன்றை அந்த இடத்திலேயே கை...