Maalaimalar
கோவை ஜெயில் வளாகத்தில் இருந்து தப்பிய கைதி போலீசில் சிக்கினார்
தனிப்படை போலீசார் ராகவனை கோவைக்கு அழைத்து வந்தனர். ராகவன் தப்பி ஓடியது தொடர்பான வழக்கை விசாரிக்கும் ரேஸ்கோர்ஸ் போலீசாரிடம் ராகவன் ஒப்படைக்கப்பட்டார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பவானிசாகர் பகுதியில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் வசித்து வந்தவர் ராகவன் (வயது 42). இவர் மீது வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. தப்பி ஓட்டம் கடந்த 30-ந் தேதி இவரை கோவை மாவட்டம் அன்னூர் போலீசார் திருட்டு வழக்கு…