உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

நடிகர் ஜூனியர் பாலையா காலமானார்!

பழம்பெரும் நடிகர் டி.எஸ்.பாலையாவின் மகனான ஜூனியர் பாலையா நேற்று(02.11.2026) உடல் நலக்குறைவால் காலமானார். இவரது இயற்பெயர் ரகு பாலையா. ஆனால் திரைத்துறையில் நுழைந்தவுடன் ஜூனியர் பாலையா என மாற்றிக்கொண்டார். 1975ஆம் ஆண்டு வெளியான ‘மேல்நாட்டு மருமகள்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ’கோபுர வாசலிலே’, ‘கரகாட்டக்காரன்’, ‘சின்னத்தாயி’, ‘சங்கமம்’, ‘வின்னர்’ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருந்தார். கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் பயணித்த இவர் சினிமாவைத் தாண்டி சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வந்தார். ஆனால் 2007ஆம் ஆண்டுக்கு பிறகு பெரிதாக நடிக்கவில்லை. பின்பு…