உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

தி பிக் ஹீட் (1953): பழிவாங்கும் போலீஸ் அதிகாரி | ஹாலிவுட் மேட்னி 53

ஒரு தற்​கொலை வழக்கை விசா​ரித்​ததன் விளைவாக, பணி​யிடை நீக்​கம் செய்​யப்​பட்ட காவல்​துறை அதி​காரி, அதற்​குக் காரண​மான மாஃபியா கும்​பலை​யும், துணைநிற்​கும் ஊழல் காவல்​துறையையும் எதிர்த்​துப் போராடுவதே ‘தி பிக் ஹீட்’ (THE BIG HEAT - 1953) திரைப்​படத்​தின் ஒரு வரிக் கதை. மேஜையில் உள்ள துப்​பாக்​கியை ஒரு கை எடுக்​கிறது; டுமீல்! டாம் டங்​கன் என்ற காவல்​துறைப் பணி​யாளர் தற்​கொலை செய்து​கொள்​கிறார். சத்​தம் கேட்டு…