Hindu Tamil Thisai
வாழும் படைப்பாளிகளைக் கொண்டாடுவோம்!
தமிழ்ப்பாடத்தை நடத்த ஆறாம் வகுப்புக்குள் நுழைந்தபோது மாணவர்கள் ஆவலாக இருந்தனர். பாடத்தின் தலைப்பு: கவிதைப் பேழை - 'ஏதிலிக்குருவிகள்'. பாடலை இயற்றியவர் - எழுத்தாளர் அழகிய பெரியவன். தான் வாழ்ந்த ஊரின் இளமைக் கால நினைவுகளில் பொதிந்திருந்த இயற்கையின் பேரழகைத் தனக்கே உரிய நயத்தோடு எழுத் தாளர் வர்ணித்துப் பாடியிருந்தார். பாடலின் வரிகளில் மாணவர்கள் ஒன்றிப்போனார்கள். ஓர் உரையாடல் பாடத்தை நடத்தி முடித்துவிட்டு, “இப்பநீங்க இந்தப்…