Indian Express Tamil
அண்ணன் இதயத்தை வைத்து சாமுண்டீஸ்வரியை காப்பாற்றிய கார்த்தி: விபத்து பற்றிய உண்மை தெரியவருமா?
கார்த்திகை தீபம் எபிசோட் அப்டேட்: சாமுண்டீஸ்வரியைக் காப்பாற்றிய அருணின் இதயம்... அவரது மரணத்துக்குப் பின்னால் இருக்கும் மர்மம் என்ன? ‘கார்த்திகை தீபம்’ சீரியலில், அடுத்தடுத்து அதிர்ச்சியான திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. ட்ரோன் மூலம் இதயத்தைக் கொண்டு சென்ற கார்த்திக், சாமுண்டீஸ்வரியைக் காப்பாற்றிய நிலையில், அருணின் மரணத்துக்குப் பின்னால் இருக்கும் அதிர்ச்சியான உண்மையும் தற்போது வெளியாகியிருக்கிறது. கார்த்திக் ட்ரோன் மூலம் கொண்டு வந்த இதயத்தை வைத்து, மருத்துவர்கள் சாமுண்டீஸ்வரிக்கு வெற்றிகரமாக இதய மாற்று அறுவை சிகிச்சை செய்கிறார்கள். இதனால் சாமுண்டீஸ்வரி உயிர் பிழைத்து விடுகிறார். இந்தச் செய்…