IBC Tamil
ஹோமாகம காவல் நிலையத்தில் இளைஞன் உயிரிழப்பு:பிரேத பரிசோதனை இன்று
ஹோமாகம சிறையில் உயிரிழந்த இளைஞனின் பிரேதப் பரிசோதனை இன்று (27) களுபோவில மருத்துவமனையில் நடத்தப்படவுள்ளது.குறித்த சந்தேக நபர் ஹோமாகம காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, பின்னர் சிறைச்சாலையில் உயிரிழந்தார். இதற்கிடையில், இந்தச் சம்பவம் தொடர்பில் ஹோமாகம காவல் நிலையத்தைச் சேர்ந்த மூன்று காவல்துறை அதிகாரிகள் ஒக்டோபர் 26ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை மாஅதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, மேல் மாகாண தெற்கு குற்றப் பிரிவு ...