Indian Express Tamil
கண்ணாடியில் கைரேகை பட்டால் சட்டையால் துடைக்காதீங்க... லென்ஸே வீணாகிடலாம்
கண் கண்ணாடி அணிபவர்களில் பலரும் கண்ணாடி லென்ஸில் தூசி, அழுக்கு அல்லது கைரேகைகள் படியும்போது, உடனடியாகத் தங்களது சட்டையின் ஓரத்தைக் கொண்டு துடைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அவசரமான நேரங்களில் இது எளிதான வழியாகத் தோன்றினாலும், இந்தப் பழக்கம் நாளடைவில் கண்ணாடியின் தரத்தையும் பார்வைத் தெளிவையும் பாதிக்கக்கூடும் என்று கண் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக, விலை உயர்ந்த பவர் லென்ஸ், ப்ளூ லைட் பாதுகாப்பு லென்ஸ் மற்றும் பல்வேறு பாதுகாப்புப் பூச்சுகள் கொண்ட கண்ணாடிகளைப் பயன்படுத்துபவர்கள் இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில், கண்ணாடியைத் தவறான முறையில் சுத்தம் செய்வ…