Nakkheeran
மீண்டும் ரிலையன்ஸ் குழுமத்துடன் கூட்டணி - பிஸ்கட் விளம்பரத்தில் அஜித்!
நடிகர் அஜித் குமாரின் கார் ரேஸிங் அணியான ‘அஜித் குமார் ரேஸிங் அணி’ ரிலையன்ஸ் குழுமத்துடன் கடந்த ஆண்டு கூட்டணி வைத்திருந்தது. அதாவது ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் லிமிடெட் தயாரிக்கும் கேம்பா குளிர்பானம் அஜித் அணியின் அதிகாரப்பூர்வ எனர்ஜி பார்ட்னராக செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதனால் கேம்பா எனர்ஜி குளிர்பான விளம்பரத்தில் அஜித் நடித்திருந்தார். அந்த விளம்பரத்தின் வீடியோவும் புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வைரலாகி விமர்சனங்களையும் சந்தித்தது. அதாவது விளம்பரத்தைத் தாண்டி அஜித் குமார் மீது விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டது. பல ஆண்டுகளுக்கு முன் விளம்பரத்தில் நடிக்க மாட்டேன் என முடிவெடுத்த…