Nakkheeran
”லட்சக்கணக்கில் கைமாறும் பணம்”; தூய சக்திகளின் ஆட்சியில் இப்படி தான் நடக்குமா?
தமிழகத்தில் அரசியல் களத்தில் புதிய எழுச்சியோடு வலம் வரும் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக), 'தூய்மையான ஆட்சி' என்ற முழக்கத்திற்கு உலை வைக்கும் வகையிலான சம்பவங்கள் அரங்கேறத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, கரூர் மாவட்டத்தில் நியமிக்கப்பட்ட தவெகவின் மாவட்ட செயலாளர்களுக்கு இடையே நிலவும் மோதலும், வெளிவந்துள்ள அதிர்ச்சி தரக்கூடிய ஆடியோக்களும் அக்கட்சியினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. மூன்று மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொடரும் சர்ச்சைகள் கரூர் மாவட்டத்தில் தவெக சார்பில் மூன்று மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதாவது, கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் - பாலசுப்பிரமணி, மேற்கு மாவட்ட செயலாளர…