Polimer News
26,000 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு மொத்தம் 3,000 கோடி ரூபாய் நிதிக்கான காசோலைகளை வழங்கி வாழ்த்தினார் முதலமைச்சர் விஜய்
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 3,000 கோடி ரூபாய் வங்கி நிதியை முதலமைச்சர் விஜய் வழங்கினார். சென்னையில் இருந்து தனி விமானத்தில் கோவை சென்ற முதலமைச்சர், அங்கிருந்து பெருந்துறைக்கு சாலைமார்க்கமாக பயணம் மேற்கொண்டார். திருப்பூர் பெருமாநல்லூரில் அத்திக்கடவு அவினாசி திட்ட போராட்டக் குழுவினர் முதலமைச்சர் விஜயை சந்தித்து 2வது கட்ட பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். விழா அரங்கிற்கு சென்ற முதலமைச்சர், அங்கு அமைக்கப்பட்டிருந்த சுய உதவிக்குழுவினரின் கண்காட்சியை பார்வையிட்டார். சுய உதவிக்குழுவினரின் தயாரிப்புகள் குறித்து கேட்டறிந்து,…