IBC Tamil
நீரில் மூழ்கி இருவர் பலி! வவுனியாவில் பெண் நீரில் மூழ்கி உயிரிழப்பு
நாட்டின் வெவ்வேறு இரண்டு இடங்களில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற நீரில் மூழ்கிய சம்பவங்களில் பெண் ஒருவர் உட்பட இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். வவுனியா, நெளுக்குளம் காவல்துறை பிரிவின் புளியங்குளம் பகுதியில் உள்ள குளத்தில் நேற்று திங்கட்கிழமை நண்பகல் 63 வயதுடைய வவுனியா பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். மேற்படி பெண் தனியாக வசித்து வந்த மனநலம் பாதிக்கப்பட்டவர் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மனநலம் பாதிக்கப்பட்டவர் ...