உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

“கூத்தாடிகளைச் சொல்வதை கேட்டு போலீஸ் கூத்தடிக்கிறது” - ஆவேசமாகப் பேசிய டிடிவி தினகரன்!

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று (03-11-26) சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்துப் பேசினார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய டிடிவி தினகரன், “சினிமா கவர்ச்சியை காண்பித்து திராவிட ஆட்சிகளுக்கு மாற்றாக, தமிழ்நாட்டில் பல்வேறு மாற்றங்களை உருவாக்குவோம் என்று சொல்லிவிட்டு, இன்று தமிழ்நாட்டை வீழ்ச்சியை நோக்கி கொண்டு செல்லும் மாற்றத்தை தான் தந்திருக்கிறார்கள். போதைப்பொருள் வியாபாரம் தவெகவினரே செய்கின்ற அளவுக்கு தான் இன்றைக்கு இருக்கிறது. காவல்துறை அவர்களுடைய வேலைகளை செய்யாமல், ஆளுங்கட்சி ஏவி விடுபவர்களைக் கைது செய்வது ர…