Indian Express Tamil
CBSE Exams 2027: சி.பி.எஸ்.இ 10, 12-ம் வகுப்பு தேர்வு அட்டவணை எப்போது? பாட வாரியான மாதிரி வினாத்தாள் வெளியீடு
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE), 2026-27 கல்வி ஆண்டிற்கான 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணையை இந்த வாரம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு கல்வி ஆண்டிற்கான தேர்வு கால அட்டவணை வெளியாகும் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சி.பி.எஸ்.இ வாரியம் இன்னும் வெளியிடவில்லை. கடந்த கல்வி ஆண்டில், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான தற்காலிக கால அட்டவணையை செப்டம்பர் 24-ஆம் தேதியும், இறுதித் தேர்வு கால அட்டவணையை அக்டோபர் 30-ஆம் தேதியும் சி.பி.எஸ்.இ வாரியம் வெளியிட்டிருந்தது. சி.பி.எஸ்.இ வாரியம் தனது அதிகாரப்பூர்வ இணையதளமான cbse.gov.in-இல் தேர்வு அட்டவணையை பத…