IBC Tamil
யாழில் அரச காணிகளைச் சுவீகரிக்கும் மோசடி: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
யாழ்ப்பாணத்தில் நீர்ப்பாசன திணைக்களத்தின் காணியை அடாத்தாக கையகப்படுத்தியிருந்த தனியாரிடம் இருந்து குறித்த காணியை பருத்தித்துறை நீதவான் நீதிமன்று மீட்டு நீர்பாசன திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளது. கரவெட்டி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட காரணவாய் மேற்கு கிராம சேவையாளர் பிரிவில் நீர்ப்பாசன திணைக்களத்திற்கு சொந்தமான நீரேந்து பிரதேசத்தில் சுமார் 40 பரப்பு காணியை அடாத்தாக தனி நபர் ஒருவர் கையகப்படுத்தி அதற்கு எல்லை வேலிகளையும் நட்டு வைத்திருந்தார். இது தொடர்பில் நீர்ப்பாசன திணைக்களத்தின...