Indian Express Tamil
ரிலீஸ்க்கு ரெடியான மூக்குத்தி அம்மன் 2; நயன்தாராவுக்கு 60 அடி கட்அவுட்: நடிகை ரெஜினா ரியாக்ஷன் என்ன?
பல தலைமுறைகளாக நடிகர்களுக்கு மட்டுமே கட்அவுட் வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மூக்குத்தி அம்மன் 2 படத்திற்காக நயன்தாராவுக்கு கட்அவுட் வைக்கப்பட்டுள்ளது ஆரோக்கி்யமான மாற்றம் என்று நடிகை ரெஜினா கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து வெற்றிப்படங்களை கொடுத்துள்ள நயன்தாரா சமீபகாலாக சோலோ ஹீரோயின் கதைகளில் நடித்து வருகிறார். இதில் கடந்த 2020-ம் ஆண்டு வெளியாகி பெரிய வரவேற்பை பெற்ற படம் மூக்குத்தி அம்மன். ஆர்.ஜே.பாலாஜி இயக்கிய இந்த படத்தில் ஊர்வசி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். நேரடியாக ஓ.டி.டி தளத்தில் வெளியான இந்த படம் பெரிய வெற்றியை பெற்றிருந்தது. தற்போது 6 ஆண்டுகள் இடைவ…