Daily Thanthi
மீனவர் மழைக்கால நிவாரணத் தொகையை உடனடியாக வழங்குக - தமிழக அரசுக்கு எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்
சென்னை, மீனவர் மழைக்கால நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சி மீனவர் அணி மாநில ஒருங்கிணைப்பாளர் செய்யது அஹமது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மழைக்கால நிவாரணத் தொகை மீன்பிடிக்க முடியாத பருவமழைக்காலங்களில், கடல் சீற்றம் மற்றும் காலநிலை மாற்றம் காரணமாகத் தொழில் முடங்கி, கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் கடலோர மீனவச்…