Nakkheeran
“துரைமுருகன் இல்லத்தில் சமஸ்கிருத மந்திரங்களுடன் புரோகிதத் திருமணமா?” - கி.வீரமணி கண்டனம்!
முன்னாள் அமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகனின் பேத்தியும், திமுக எம்.பி கதிர் ஆனந்தின் மகளுமான செந்தாமரைக்கு, கடந்த நவம்பர் 1ஆம் தேதி பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கண்ணன் ரவியின் மகன் தீபக் ரவி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. மிகப் பிரமாண்டமாக நடைபெற்ற இந்த திருமண விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக முன்னாள் அமைச்சர்கள், பா.ம.க நிறுவனர் ராமதாஸ், பா.ம.க தலைவர் அன்புமணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். சமஸ்கிருத மொழியில் மந்திரங்கள் முழங்க இந்த திருமணம் நடைபெற்றதும், மணமகள் செந்தாமரை தங்க நகைகள் அணிந்திருந்ததும் தமிழக அ…