Nakkheeran
160 வருஷத்துக்கு முன்னாடி போட்ட தப்புக் கணக்கு; அமெரிக்காவை அலறவிடும் 'நம்ம ஊர் மைனாக்கள்'
சுற்றுச்சூழலில் நாம் செய்யும் ஒரு சிறிய மாற்றம் பல தலைமுறைகளைக் கடந்தும் எத்தகைய விநோதமான மற்றும் விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு உதாரணமாக, இந்தியாவின் அசல் மைனாப் பறவைகள் அமெரிக்காவின் ஹவாய் தீவுகளில் உள்ளூர் பூர்வகுடிப் பறவைகளின் வாழ்வாதாரத்திற்குப் பெரும் சவாலாக மாறியுள்ள சுற்றுச்சூழல் விநோதம் தற்போதைய உலகளாவிய இயற்கை ஆர்வலர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1865 ஆம் ஆண்டு ஒரு குறிப்பிட்ட விவசாயப் பிரச்சனைக்குத் தற்காலிகத் தீர்வாகத் தேடி கொண்டுவரப்பட்ட இந்த மைனாக்கள், இன்று ஹவாய் தீவுகளின் தலைநகரான ஹோனலுலுவின் ஒட்டுமொத்தப் பகுதிகளையும் ஆக்கிரமித்துக்கொண்டு அங்கிர…