Daily Thanthi
வாழ்வதா? சாவதா? என்ற நிலைக்கு மக்களை தள்ளுவதுதான் ஆட்சியின் சாதனையா? வேல்முருகன் ஆவேசம்
சென்னை, தமிழகத்தில் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். அத்தியாவசிய பொருட்கள் இது தொடர்பாக, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்…