Indian Express Tamil
நர்சரிக்குப் போய் காசு கொடுத்து ரோஜா செடி வாங்க வேண்டாம்... வீட்டில் இருக்கும் இந்த ஒரு கிளை போதும்
வீட்டில் அழகான ரோஜா செடிகளை வளர்க்க வேண்டும் என்பது பலருக்கும் விருப்பமான ஒன்றாக இருக்கும். ஆனால், நர்சரிக்குச் சென்று செடிகளை வாங்க வேண்டும், அதற்குத் தனியாகச் செலவு செய்ய வேண்டும் என்பதால் சிலர் தயக்கம் காட்டுவதுண்டு. உண்மையில், ரோஜா செடி வளர்ப்பதற்கு நர்சரியில் சென்று புதிய செடியை வாங்குவது மட்டுமே வழியல்ல. ஏற்கெனவே வீட்டில் அல்லது நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் ஆரோக்கியமாக வளர்ந்துகொண்டிருக்கும் ரோஜா செடியிலிருந்து ஒரு சிறிய தண்டுக் கிளையை எடுத்தே புதிய செடியை உருவாக்க முடியும். இதற்குத் தோட்டக்கலை முறையில் 'தண்டு வெட்டுதல்' (Stem Cutting) என்று பெயர். சரியான முறையில் கிளையைத் தேர்ந்தெடு…