Indian Express Tamil
'வேதனையும், வெட்கமும் அடைகிறோம்; ஒரு துளி விஷம் பட்டால், ‘பாலின் வெண்மையா பேசப்படும்'? துரைமுருகனுக்கு கி.வீரமணி கண்டனம்
தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகனின் பேத்தியும், நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் - சங்கீதா இணையரின் மகள் செந்தாமரைக்கும், திட்டக்குடி ரவி கண்ணன் - தீபா ரவி தம்பதியின் மகன் தீபக் ரவிக்கும் சென்னையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தை பார்ப்பனர்கள் சமஸ்கிருத மந்திரங்கள் ஓதி நடத்தி வைத்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. தி.மு.க-வின் பொதுச் செயலாளராக இருந்து கொண்டு துரைமுருகன் இப்படியொரு காரியம் செய்யலாமா? என்பது போல் தி.மு.க-வினரே கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்நிலையில், 'துரைமுருகன் சுமார் 45 ஆண்டுகளுக்குமேல் தி.மு.க-வில் உள்ளவர். நாடறிந்தவர்…