உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

இலங்கையின் பிரதான வைத்தியசாலைகளுக்குப் புதிய பணிப்பாளர்கள் நியமனம்!

இலங்கையிலுள்ள ஐந்து பிரதான வைத்தியசாலைகளுக்குப் புதிய பணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரச சேவை ஆணைக்குழுவின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நியமனங்களுக்கான அதிகாரபூர்வ நியமனக் கடிதங்களை, சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கையளித்துள்ளார். அதற்கமைய களுபோவில, ராகம, மட்டக்களப்பு மற்றும் பேராதனை ஆகிய நான்கு போதனா வைத்தியசாலைகளுக்கும், லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கும் இந்த புதிய பணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.