Samayam Tamil
தீபாவளிக்குப் பிறகு செவ்வாய் பெயர்ச்சி 2026: நிதி மற்றும் குடும்ப வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களைப் பெறும் ராசிகள்
ஜோதிட சாஸ்திரத்தின் படி செவ்வாய் கிரகம் ஒரு நபருக்கு தைரியம், வலிமை, தொழில் முன்னேற்றம், மனை, நிலம் போன்ற விஷயங்களுக்கான கிரகமாக குறிப்பிடப்படுகிறார். இவர் தற்போது நீச நிலையில் சஞ்சாரம் செய்து வருகிறார். தீபாவளி முடிந்த பின்னர் நவம்பர் 12ஆம் தேதி, கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு இரவு 8:20 மணிக்கு பெயர்ச்சி ஆகிறார். செவ்வாய் கிரகத்திற்கு நட்பு ராசியான சிம்மத்தில் சஞ்சாரம் செய்யும் காலத்தில் சில ராசிகளின் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், நிதி செழிப்பும் பெருகும்.