Nakkheeran
”இனி கரண்ட் பில் கவலை இல்லை”; ரூ.1 கூட செலவில்லாமல் அனைத்து வீட்டிற்கும் மின்சாரம்
தற்காலத்தில் விலைவாசி தொடர்ந்து அதிகரித்து வருவதால் சாதாரண ஏழை, எளிய மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில், மின்சாரக் கட்டணம் அதிகரித்து வருவதும் அவர்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதிப்பதாக அமைந்துள்ளது. இந்த சூழலில், ஒரு கிராமமே மின்சார கட்டணத்திலிருந்து விடுபட்டுள்ளது, தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம், ராஜ்நந்த்காவ் மாவட்டத்தில் உள்ளது கைரா கிராமம். இங்கு, 141 வீடுகள் உள்ளன. மக்கள் தொகையைப் பொறுத்தவரையில், 889 பேர் உள்ளனர். இந்த கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும், தற்போது 2 கிலோ வாட் திறன் கொண்ட மின்சாரப் பலகைகள் (சோலார் பேனல்கள்) அமைக்கப்பட்டுள்ளன. ஒன்றிய…