Indian Express Tamil
புதுப் படங்கள் வெளியானால் தினசரி 6 காட்சிகள் திரையிட அனுமதி; தயாரிப்பாளர்கள் கோரிக்கையை ஏற்று விஜய் அதிரடி உத்தரவு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல புதிய திரைப்படங்கள் ரிலீஸுக்கு வரிசைக்கட்டி நிற்கும் நிலையில், தமிழ்நாட்டில் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கங்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, புதிய தமிழ்த் திரைப்படங்கள் வெளியாகும் நாளிலிருந்து ஒரு வார காலத்திற்குத் தினசரி 6 காட்சிகள் திரையிட தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 1957-ஆம் ஆண்டு தமிழ்நாடு திரையரங்குகள் (ஒழுங்குமுறை) விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, காலை 6.00 மணி முதல் மறுநாள் அதிகாலை 2.30 மணி வரை இந்த சிறப்பு 6 காட்சிகளைத் திரையிட முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அனுமதி…