IBC Tamil
அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளிகள் கடும் அவதி!
அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலைக்கு மழைக்காலங்களில் செல்லும் நோயாளர்களும் பொதுமக்களும் தொடர்ச்சியாகப் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கும் அசௌகரியங்களுக்கும் முகம் கொடுத்து வருகின்றனர். தற்போது பிராந்தியத்தில் மாரிகால மழை ஆரம்பித்துள்ள நிலையில் அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலை வளவினுள்ளும் வைத்தியசாலைக்குச் செல்லும் பிரதான அணுகுபாதைகளிலும் மழைநீர் வடிந்தோட வழியின்றி அதிகளவில் தேங்கி நிற்கின்றது. முறையான வடிகான் அமைப்பு இன்மையாலும், நீர் வழிந்தோடும் பாதைகள் அடைபட்டுள்ளமையாலும் தேங்க...