உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

அரிசி மாவு இருக்கா? பஞ்சு போன்ற மலபார் ஸ்பெஷல் ஒரோட்டி சுட்டெடுக்கலாம்

கேரளாவில் பாரம்பரியமிக்க மற்றும் ஆரோக்கியமான உணவுகளில் ஒன்று 'ஒரோட்டி'. அரிசி மாவில் செய்யப்படும் இந்த மென்மையான உணவு, செரிமானத்திற்கு மிகவும் நல்லது. மைதா, செயற்கை நிறங்கள் அல்லது இரசாயனங்கள் எதுவும் சேர்க்கப்படாததால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயமின்றி இதனை உண்ணலாம். திடீரென வீட்டிற்கு விருந்தினர்கள் வந்தாலோ அல்லது வித்தியாசமான பாரம்பரிய உணவை சுவைக்க விரும்பினாலோ, மிகக் குறைந்த நேரத்தில் சமையலறையில் இதை எளிதாகத் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: அரிசி மாவு - 2 கப் உப்பு தண்ணீர் எண்ணெய் செய்முறை: ஒரோட்டி செய்வதற்கான அரிசி மாவை கடைகளில் வாங்கலாம். அல்லது, வீட்டிலேயே 5 கிலோ பொன்…