உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

அர்ஜுன் தாஸின் ‘ஜான் டோ’ ட்ரெய்லர் எப்படி? - மர்மமும் விசாரணையும்

அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஜான் டோ’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது. அர்ஜுன் தாஸ் காவல் துறை அதிகாரியாக நடித்திருக்கும் இந்தப் படத்தின் ட்ரெய்லரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர், ‘‘ஜான் டோ’ படத்தின் ட்ரெய்லரை வெளியிடுவதில் மகிழ்ச்சி. வாழ்த்துகள் அர்ஜுன் தாஸ் மச்சி. படம் வெற்றி பெற ஒட்டு மொத்த படக்குழுவுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்’ எனத் தெரிவித்துள்ளார்…