Indian Express Tamil
திரையரங்குகளில் மீண்டும் அதிகாலை 6 மணி காட்சி: தமிழக அரசு புதிய உத்தரவு
புது திரைப்படங்கள் திரைக்கு வரும் வேளையில், அவற்றின் முதல் காட்சியை அதிகாலை 4 மணிக்கே தொடங்கும் நடைமுறை இந்திய அளவில் பல்வேறு திரையரங்குகளில் பின்பற்றப்பட்டு வந்தது. நாளடைவில் இந்நடைமுறை மாற்றமடைந்து, முதல் காட்சி காலை 6 மணிக்குத் திரையிடப்பட்டு வந்தது. குறிப்பாகத் தமிழ்நாட்டில் முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியாகும் தருணங்களில், அதிகாலை 4 மணி காட்சிகளுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், 2023-ஆம் ஆண்டில் அஜித்குமார் நடிப்பில் வெளியான ‘துணிவு’ திரைப்படத்தின் அதிகாலை காட்சிக் கொண்டாட்டத்தின் போது துரதிர்ஷ்டவசமாக ரசிகர் ஒருவர் உயிரிழந்தார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, திரையரங…