Nakkheeran
’ஜெயிலர் 2’ படம் பார்த்த முதல்வர்; பாராட்டும் பொதுமக்கள்
ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர் 2’ படம் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில், திரையரங்கில் முதல்வர் பொதுமக்களுடன் ஒன்றாக அமர்ந்து படம் பார்த்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. புதுச்சேரி, சேதராப்பட்டு பகுதியில் பிரபல திரையரங்கம் ஒன்று உள்ளது. இந்த திரையரங்கில் ரஜினிகாந்த் நடிப்பில் அண்மையில் வெளியான ’ஜெயிலர் 2’ படம் திரையிடப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று (03-11-26) புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி இந்த திரையரங்கிற்கு வருகை தந்தார். அவர் எந்தவித சிறப்புச் சொகுசு ஏற்பாடுகளும் இன்றி, சாதாரணமாக மக்களுடன் மக்களாகத் தனது நண்பர்களுடன் அமர்ந்து படம் பார்…