Maalaimalar
2026 இறுதியுடன் இஸ்ரேலுக்கான நிதியுதவியை நிறுத்தும் அமெரிக்கா - டிரம்ப் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
இஸ்ரேலுக்கான அமெரிக்க ராணுவ உதவியை இந்தாண்டு இறுதியுடன் நிறுத்திக் கொள்வது தொடர்பாக, பெஞ்சமின் நெதன்யாகுவுடன் ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இதுதொடர்பாக பேசிய அவர்., “நெதன்யாகுவும், நானும் இஸ்ரேலுக்கு ஆண்டுக்கு 4 பில்லியன் டாலர் கொடுப்பதாக ஒரு ஒப்பந்தம் செய்துள்ளோம். மேலும் சில மாதங்களுக்கு முன்பு அதை நிறுத்துவதாகவும் ஒரு ஒப்பந்தம் செய்தோம்.” என தெரிவித்தார்…