Indian Express Tamil
கடற்கொள்ளையர் வசம் சிக்கிய கப்பல்: நடுக்கடலில் சாகசமாகப் பாய்ந்து மீட்ட இந்திய சிறப்பு கடற்படை
எழுதியவர்: Amrita Nayak Dutta சோமாலியாவின் வடகிழக்குக் கரையை ஒட்டிய பகுதியில், கடத்தப்பட்ட ஈரானிய மீன்பிடிப் படகைப் மீட்க இந்திய கடற்படை 48 மணி நேரத் தீவிர நடவடிக்கையை மேற்கொண்டது. போர்க்கப்பல் மற்றும் இடைவிடாத வான்வழி கண்காணிப்புடன் கூடிய இந்தச் செயல்பாட்டில், இந்திய கடற்படையின் கடல்சார் சிறப்புப் படையினர் (மார்கோஸ்) வானில் இருந்து விண்வீழ் குடை (பாராசூட்) மூலம் கடலில் குதித்து படகிற்குள் புகுந்தனர். அதில் இருந்த 20 ஈரானிய மாலுமிகளையும் எவ்வித காயமுமின்றி, எவரும் உயிரழக்காமல் கடற் கொள்ளையர்களிடமிருந்து பாதுகாப்பாக மீட்டனர். 'அஜினி' என்ற அந்த மீன்பிடிப் படகு கடந்த மாதத் தொடக்கத்தில் ஆயுதம் ஏந…