Nakkheeran
தாத்தாவின் நினைவாக ஓடிய முதல் மாரத்தான்; பினிஷிங் லைனுக்கு 2 மைல் முன்பு வீராங்கனைக்கு நேர்ந்த சோகம்
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற உலகப் புகழ்பெற்ற நியூயார்க் சிட்டி மாரத்தான் போட்டியில், பினிஷிங் லைனை எட்டுவதற்கு வெறும் இரண்டு மைல்கள் மட்டுமே இருந்த தூரத்தில் 24 வயது இளம் வீராங்கனை ஒருவர் திடீரெனச் சுருண்டு விழுந்து உயிரிழந்த அதிர்ச்சியூட்டும் சோகச் சம்பவம் ஒட்டுமொத்த விளையாட்டு உலகையும் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது. தனது வாழ்நாளின் முதல் மாரத்தான் போட்டியில் பங்கேற்ற அந்த இளம் பெண், இறுதி இலக்கை அடைவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு மைதானத்திலேயே மரணமடைந்தது சக ஓட்டப்பந்தய வீரர்களிடையேயும், அவரின் குடும்பத்தினரிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த இளம் வீராங்கனைய…