Indian Express Tamil
எழுத்தாளர் இரா. முருகன் மரணம்; இவர்களை எனக்குத் தெரியும் என்பதே பெருமை: கமல்ஹாசன் புகழஞ்சலி
தமிழ் இலக்கிய தளத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாகத் தனது தனித்துவமிக்க எழுத்து நடை மற்றும் நவீனக் கதையாடல்களால் ஆழமான தடம் பதித்த மூத்த எழுத்தாளர் இரா. முருகன் உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னையில் செவ்வாய்க்கிழமை (03.11.2026) காலமானார். அவருக்கு வயது 74. 1977-ம் ஆண்டில் 'கணையாழி' இதழ் வாயிலாகத் தனது இலக்கியப் பயணத்தைக் கவிதைகள் மூலம் தொடங்கிய இவர், சிறுகதை, நாவல், கட்டுரை, மேடை நாடகம் மற்றும் திரைப்பட வசனம் எனப் பல்வேறு தளங்களில் இயங்கி வந்தார். மாந்திரீக யதார்த்தவாதப் பின்னணியைக் கொண்டு இவர் படைத்த 'அரசூர் வம்சம்', 'விஸ்வரூபம்', 'அச்சுதம் கேசவம்', 'வாழ்ந்து போதீரே' போன்ற நாவல்கள் வாசகர்களிடை…