Nakkheeran
அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் கடும் எச்சரிக்கை!
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பணியாற்றும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் பொதுமக்களிடம் மரியாதையுடனும், கனிவுடனும் நடந்து கொள்ள வேண்டும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆ. விஜய் தமிழன் பார்த்திபன் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக மாநகர் போக்குவரத்துக் கழகத் தலைமையகத்தில் இன்று (03.11.2026) நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்குப் பேருந்து இயக்கத்தின் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து விரிவான அறிவுரைகள் வழங்கப்பட்டன. தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு, பெண்களுக்கு வெற்றி பயணம் (கட்டணமில்லாப் பயணத் திட்டம்) என்ற திட்டத்தைச் சிறப்…