Indian Express Tamil
“திராவிட பிரியாணிக்காகக் கையேந்தி நிற்கும் பிழைப்புவாதி சீமான்: வன்னி அரசு கடும் தாக்கு
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நீதித் துறை சார்பில் வண்டியூர் தீர்த்தக்காடு பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கல்லாணை முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற சமூகநீதித் துறை அமைச்சர் வன்னி அரசு, பயனாளிகளுக்குப் பட்டாக்களை வழங்கிப் பேசினார். இதன் மூலம், 40 ஆண்டுகளாக வீட்டு மனைப் பட்டா கோரி வந்த மதுரை தீர்த்தக்காடு மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சமூகநீதித் துறை அமைச்சர…