Indian Express Tamil
பூமியிலிருந்து ஒரு ஒளி நாள் தொலைவு: மனிதகுலத்தின் தூதுவன் வோயேஜர் 1 படைக்கும் சாதனை
நாசாவின் வோயேஜர் 1 விண்கலம் மனித விண்வெளி ஆய்வின் வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றொரு மைல்கல்லை விரைவில் எட்டவுள்ளது. 1977-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட இந்த விண்கலம், பூமியிலிருந்து புறப்பட்டு கிட்டத்தட்ட ஐந்து தசாப்தங்களை நிறைவு செய்யவுள்ள நிலையில், 2026 நவம்பர் 18 அன்று பூமியிலிருந்து ஒரு ‘ஒளி நாள்’ (one-light-day) தொலைவைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒளி ஒரு நாளில் பயணிக்கும் தூரமே 'ஒளி நாள்' என்று அழைக்கப்படுகிறது. வினாடிக்கு சுமார் 3 லட்சம் கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் ஒளி, 24 மணிநேரத்தில் கடக்கும் இந்த தொலைவு ஏறத்தாழ 25.9 பில்லியன் கிலோமீட்டர்களாகும்…