Samayam Tamil
திமுகவினர் குடும்ப நிகழ்ச்சிகளின் போது மட்டும் சமஸ்க்ரிதத்தை விரும்புவார்கள்: துரைமுருகனுக்கு நன்றி - பாஜக நாராயணன் திருப்பதி விமர்சனம்
திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும் திமுகவின் மூத்த தலைவருமான துரை முருகனின் பேத்தி திருமணம் நவம்பர் 1 ஆம் தேதி நடைபெற்றது. இந்த திருமணத்தில் சமஸ்கிருத மந்திரம் கொண்டு சடங்குகள் நடைபெற்றது பேசுபொருளாகியுள்ள நிலையில் துரைமுருகன் அவர்களுக்கு நன்றி என பாரதிய ஜனதா கட்சி தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.