உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

மாணிக்கம் தாகூருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு : திரும்பப் பெற்றார் விஜய பிரபாகரன்!

கடந்த 2024ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றார். இதனையடுத்து அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன், மாணிக்கம் தாகூரின் வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், மாணிக்கம் தாகூர் தனது வேட்புமனுவில் சொத்துகள் மற்றும் குற்றவியல் வழக்குகள் தொடர்பான முழுமையான விவரங்களை மறைத்துள்ளதாகவும், தேர்தலில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வெற்றி பெற்றதாகவும் விஜய பிரபாகரன் குற்றம்சாட்டியிருந்தார். இதற்கிடை…