உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

கபடி அரசியல்! கார்த்திகாவை முடக்கிய கோச்!

சென்னையைச் சேர்ந்த தங்கப்பெண் கண்ணகி நகர் கார்த்திகா, ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்து, தனது திறமையால் பல்வேறு வெற்றிகளைப் பெற்று, இந்திய அணியில் இடம்பிடித்து, நம்பர் 1 ரைடராக, நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலிப்பவர். அவரை, அக்டோபர் 23 முதல் 31 வரை, குஜராத் மாநிலம் அகமதாபாத்திலுள்ள சாவர்க்கர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற முதலாவது காமன்வெல்த் கபடி சாம்பியன்ஷிப் போட்டியில் மாற்று ஆட்டக்காரராக ஓரங்கட்டிய சம்பவம் பலரையும் கொதிப்படைய வைத்துள்ளது. லீக் போட்டியில் இந்தியா, உகாண்டா அணியை 41-18 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது. அடுத்தடுத்த போட்டிகளில், மலேசியா, சிங்கப்பூர், நைஜீரியா அணிகளை இந்தியா வீ…