Nakkheeran
மோசடி மன்னன் 5000 கோடி பிரேம்குமார் சிக்கும் ரூட் தலை!
ரூ.5,000 கோடி நிதி மோசடி வழக்கில் சென்னையில் கைதான பிரேம் குமாரை காப்பாற்ற நடந்த முயற்சி களும், அதை முறியடிக்க கேரள காவல்துறை அரங்கேற்றிய அசத்தல் சம்பவங்களும் ஹாலிவுட் ரேஞ்சுக்கு பரபரப்பை ஏற்படுத்தி யுள்ள அதே நேரத்தில், அந்த மோசடி மன்னனுக்கும் தமிழகத்தின் முக்கிய புள்ளிகள் சிலருக்கும் தொடர்பு இருப்பதாக வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக் கின்றன. கேரளாவை பூர்வீகமாக கொண்ட பிரேம்குமாரால் கடந்த 2006ஆம் ஆண்டு சென்னை கோயம்பேட்டில் வெறும் நான்கு பேரோடு துவங்கப்பட்ட பாரத் லஜ்னா மல்டி ஸ்டேட் ஹவுசிங் கோஆபரேட்டிவ் சொசைட்டி நிறுவனம் தமிழகம், கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் சுமார் 150…