Dinamani
தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் தேனி, கோவை மாவட்டங்களில் புதன்கிழமை (நவ. 4) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தென் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. லட்சத்தீவு மற்றும் அதையொட்டிய பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. கடலோர கா்நாடக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன்…