Maalaimalar
தமிழகத்தின் 2 மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டின் தேனி, கோவை மாவட்டங்களில் இன்று (புதன்கிழமை) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "தென் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. லட்சத்தீவு மற்றும் அதையொட்டிய பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. கடலோர கா்நாடக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி…